கௌரவ பிரதி அமைச்சர் அவர்கள்

Hon.Deputy Minister’s message

பாரம்பரியமும் நீண்ட இதிகாசத்தையும் கொண்ட இலங்கை அஞ்சல் ஆனது இலாபம் சம்பாதிப்பதை விட மக்களுக்கான சேவையே முக்கியமானது என்ற நோக்குடன் பயணித்து தற்போது நவீன தொழில் நுட்பத்துடன் கைகோர்த்து புதிய பாதையில் நடைபோடுகின்றது.

இம் முக்கிய கால கட்டத்தில் புதிய இணையத்தளம் ஒன்றை நிர்மாணித்து அதன் ஊடாக நவீன சேவைகளை மக்களிடத்தே எடுத்துச் செல்வது ஒரு மைல் கல்லாக நோக்கப்படல் வேண்டும்.

மக்களின் அபிமானத்தைக் கொண்்ட இவ் அரச நிறுவனத்தில் இணையத்தளம் ஒன்று பேணப்படுவது மிகவும் அவசியமானதாகும். இவ் இணையத்தளத்தினால் மக்களுக்கு வழங்கப்படக்கூடிய சேவைகள் அளப்பரியன. “மகிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கு” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அதன் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய இவ் இணையத்தளம் மிகுந்த பங்களிப்பினை செய்யும் என்ற நம்பிக்கையுடன் நான் இச் சந்தர்பத்தில் எனது நல்வாழ்த்துக்களை அனுப்பிவைக்கின்றேன்.

சனத் ஜெயசூரிய
பிரதி அஞ்சல் சேவைகள் அமைச்சர்