எம்மைப் பற்றி

Department Of Posts

எதிர்கால நோக்கு

வாடிக்கையாளர்களின் திருப்திக்காக நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட, உற்பத்தித்திறனும், தரமும் கொண்ட அஞ்சல் சேவையை வழங்குவதன் மூலம் ஆசியாவின் சிறந்த சேவையாக மாறுவது எமது எதிர்கால நோக்காகும்.

செயற்பணி (பயணப்பாதை)

அஞ்சல் சேவையை நவீன தொழில்நுட்பத்திற்கமைய பூரணப்படுத்தி உற்பத்தித்திறன் எண்ணக்கருவினைப் பின்பற்றி, மனங்கவர் சூழலில் பதவியணியினரை ஊக்குவித்து, பாவனையாளர்களது காலத்திற்கேற்ற தேவைகளை இனங்கண்டு, சேவைகளை விரிவுபடுத்துவதோடு அவர்களது நம்பிக்கைகளை வென்றெடுத்து தனியார் துறையினரின் பங்களிப்புடன் வளங்களை வினைத்திறனுடன் பயன்படுத்தி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரீதியில் கவர்ச்சிமிகு சேவையைப் பெற்றுக்கொடுப்பது எமது செயற்பணியாகும்.

பிரதான செயற்பாடுகள்

  1. தலைமைத்துவ வழிகாட்லின்கீழ் சகல தரப்பினருடனும் இணைந்து ஒரு குழுவாக எந்தவொரு சூழலிலும், சமூக பின்னணியின்கீழும் வினைத்திறனும், நம்பிக்கையுமிக்க சேவைகளை வழங்கலும் வருமானத்தை அதிகரிப்பதும் .
  2. புதிய தொழில்நுட்ப சந்தையை மையமாகக் கொண்டு அஞ்சலில் அபிவிருத்தியை மேற்கொள்ளக்கூடிய உபாயமுறையிலான திட்டங்களை உரிய தரப்பினர்களது பங்களிப்புடன் வகுத்து செயற்படுத்துதல் .
  3. முன்னணி அரச தொடர்பாடல் நிறுவனம் என்றவகையில் அஞ்சலுக்கே தனித்துவமிக்க விடயங்களை இற்றைப்படுத்தி செயல்ரீதியானதாக்கி  அபிமானத்துக்குரிய சேவைகளை வழங்குவதற்குரிய கருத்துரீதியான மாற்றத்தை ஏற்படுத்தல் .
  4. தொடர்ச்சியான பயிற்சித் திட்டங்கள் மற்றும் முறையான செயலாற்றுகை மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் வலுவூட்டப்பட்ட ஒழுக்கமிகு பணியாளர் குழுவை மக்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் சேவைகளில் ஈடுபடுத்தல் .
  5. உரிய வேலைப்பயிற்சி ஆய்வு, வருமான அடிப்படையில் தரப்படுத்தி ஊழியர்களை ஊக்குவிப்பதன் மூலம் வினைத்திறன்மிகு சேவையை வழங்குவதன் மூலம் தெற்காசியாவிலேயே சிறந்த  கேந்திர நிலையமாக மாற்றுதல் .
  6. அஞ்சல் அலுவலகக் கட்டமைப்பை உல்லாசப் பயணிகளையும் கவரக்கூடிய வகையில் மக்கள் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய பல்பணிச் சேவைகளை வழங்கும் வர்த்தக மத்திய நிலையமாக மாற்றுதல் .
  7. நாளாந்தம் வீட்டுக்கு வீடு சேவைகளை வழங்கும் பாவனையாளர் நம்பிக்கையை வென்ற அஞ்சலை நவீன விற்பனை முறையைப் பயன்படுத்தி தரம்மிகு சேவையாக மாற்றுதல் .
  8. உள்நாட்டு, வெளிநாட்டு ஒத்துழைப்பைப் பெற்று தொழில்நுட்பத்தை உச்சளவில் பயன்படுத்தி நிறுவனத்தின் அபிவிருத்தியை அடைந்து கொள்ளல் .
  9. அழகானதும், கவர்ச்சிகரமானதுமான அலுவலக சூழலில் சேவைகளை வழங்கி பாவனையாளர்களை திருப்திப்படுத்துதல் .
  10. சர்வதேச அஞ்சல் சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற மக்கள் நம்பிக்கையை வென்ற நாடளாவிய வலைப்பின்னலையுடைய இலங்கை அஞ்சலை புதிய தொழில்நுட்ப அடிப்படையிலான போட்டிச் சந்தையை வெற்றிகொள்ளல் .
  11. கடிதங்களைப் பகிர்கின்ற தனியுரிமையைப் பாதுகாக்கின்ற மற்றும் போட்டித் தன்மைமிக்க இலாபம் கிடைக்கின்ற சட்டதிட்டங்களை வகுத்து  பொருட்களை வினைத்திறனுடன் பொறுப்பேற்றல், கொண்டு செல்லல் மற்றும் விநியோகித்தல் .
  12. துரிதமாக முன்னேறி வரும் உட்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி வழங்கப்படும் சேவைகளது தரத்தையும், வினைத்திறனையும் மேம்படுத்தல் .
  13. தரம்மிகு, வினைத்திறன்மிகு பாவனையாளர் சேவையை வழங்கும் நோக்கில் முறையான பதவி உயர்வு ஒழுங்குமுறைகளையும், இடமாற்ற முறையியலையும் செயற்படுத்தி பதவியணியினரை திருப்திப்படுத்தல் .
  14. புதிய தொழில்நுட்பத்திற்கு அமைய சகல தரப்பினரும் இணங்கக்கூடியவாறான பலம்மிக்க, வெளிப்படைத் தன்மையைப் பேணுகின்ற கணக்காய்வு மற்றும் விசாரணை முறையை அறிமுகப்படுத்தல் .
  15. துரிதமாக வளர்ச்சி கண்டு வரும் விளம்பரச் சந்தையின் சாதகத் தன்மையை ஆக்கபூர்வமாகப் பெற்றுக்கொள்வதோடு, வருமானத்தை அதிகரிப்பதற்காக குறிப்பிட்ட தரப்பினருடன் சந்தர்ப்பத்திற்கேற்ப நேரடித் தீர்மானங்களை எடுத்து துணைச் சேவையை வினைத்திறனுடன் பயன்படுத்தல் .
  16. வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களின் நோக்கங்களை நிறைவேற்றக்கூடிய வகையில்  சேவையை மேலும் விரிவாக்கல் .
  17. ஒழுங்கமைப்பு முறையை மறுசீரமைத்து ஏற்புடையவாறு சட்டங்களை ஆக்கி போட்டித் தன்மையின் நன்மையைப் பெற்றுக்கொள்ளல் .
  18. தொழிற்சங்கங்களது ஆக்கபூர்வ பங்களிப்புகளை நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கும் தொழில்சார் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் செயல்ரீதியாகப் பயன்படுத்தல் .
  19. திறமைமிகு ஆளணியை, உருவாகியுள்ள சமாதானத்துடன் தொடர்பாடல் மற்றும் சமூக நலன்புரி செயற்பாடுகளில் ஈடுபடுத்தி அஞ்சலை முன்னேற்றுதல் .
  20. முத்திரை பொழுதுபோக்கினை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பிரபல்யப்படுத்துவதன் மூலம் இலங்கையின் தனித்துவத்தை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்லல் .

Currently we have a total of 4,692 Post Offices in the whole country. The breakdown is as follows:

  • Post Offices – 653
  • Sub Post Offices – 3,410
  • Agency Post Offices – 524
  • Rural Agency Post Offices – 101
  • Estate Agency Post Offices – 04
  • Total – 4,692

Sri Lanka Post was established by the Dutch ruler’s way back in 1798 in the Maritime Provinces of the country with five offices. Today it has grown in to a mammoth organisation with more than 19,000 employees. Sri Lanka Post serves a population of nearly 20 million inhabitants in Sri Lanka. During the existence of Sri Lanka Post though known by various names it continued to serve the populace with dedication.

In the year 2,004 we had a Post Office for every 2, 400 people of this country. This in real terms means that there was an office for every 14 km radius. Today majority of our offices are equipped with state of the art equipment to provide an efficient service to our customers.

Through the 4,692 offices we provide a variety of services. We give below a summary of our services but you can learn more about them from the web site.